சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

17.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -175
தலைப்பு !
“தீயில்எரியும் எம்தீவு”

எரிகிறதே என்தீவென்று
ஏன்சிந்துகின்றீர் கண்ணீரை
அரிதங்கு வாழ்வதென்ற
அவலத்தை அறிந்தீரோ /

பெற்றதாய் வயிறெல்லாம்
பற்றியே எரிந்து
வற்றாத நதியாகி
வடிந்ததே விழிநீர் /

ஓடியும் உயிர்தப்பி
ஒழியவும் முடியாது
வாடியே உயிர்விட்ட
வயோதியர் சாபமோ /

அம்மா என்றோடி
அணைத்த பிள்ளைமுன்
அய்யோ என்றலரும்
அன்னையின் சபதமோ /

பெண்குலத்தை இழிவாக்கி
பெருந்துயரை உருவாக்கி
கண்முன்னே சூரையாடிய
கருணையற்ற பாவமோ /

தீயில் எரியும்
தீவின் கொடுமை
புவியினில் வேறெங்கும்
புலர்ந்திடல் ஆகாது /

கரியாகி குவியும்
கண்ணீர் உடல்கள்
எரிகிறதே ஈழம்
என்று தணியும் /

நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏