சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

*_சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-242_*

*“பிறந்த மனை”*

பிறந்தமனை சேரும் பற்றில் அம்மா,
பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து சென்றார்..!
உறக்கம் இன்றி அல்லும், பகலும்
உறவுகள் நாங்கள் தவித்து நின்றோம்!

மறக்க அவரால் முடியவில்லை தாய்மண்ணை
மனம் விரும்புதாம் மூத்தமகளுடன் கூடிவாழ ஒன்றாய்……

இறந்தாலும் தாய்மண்ணில் பிறந்தமனை என்றார்.
உயிர் இருக்கும்வரை தாய் நினைவில்
பிள்ளைகளோ நாங்கள் என்றும்…

சொத்து சுகம் ஏதும் இல்லை
பொன்னும் பொருளோ தேவை இல்லை
பிள்ளைகளோ காலத்தின்
கோலம் என்று….
பிறந்த மனை, வாழ்ந்த மனை
வாழ்க்கைப்பட்ட மனை வாழ்வு தர அழைக்கும்மனை
அத்தனையும் தாய்தேசம் ஒன்றே என்று…

பற்று மிக்க, பாச மிக்க
மகளும் மகனும் அன்பு
பேரப்பிள்ளைகளும் அருகில் இருக்க
அன்னை தேசம் அழைக்கிறது என்று
பறந்து சென்றார்!

நாங்கள் பிறந்த மனை
எங்கள் அன்னை மடி ஒன்றே!

அபிராமி கவிதாசன்
21.11.2023