கவிஇலக்கம் 168
தலைப்பு !
“அதனிலும் அரிது”
அரிது அரிது மானிடப் பிறப்பு
அதனினும் அரிது உடல் உறுப்பு
கசடற கற்கும் கல்வி அரிது
கற்றல்வழி நின்றல் அதனினும் அரிது
நட்பணிபேணி நற்வழிவாழ்தல் அரிது
நல்லொழுக்கம் ஞானம் அதனினும் அரிது /
மனிதன் மனிதனாய் வாழ்தல் அரிது
மனிதநேயமுடன் வாழ்தல் அதனினும் அரிது /
அன்பும் நட்பும் பேணுதல் அரிது
அன்னைதந்தை பேணுதல் அதனினும் அரிது /
பல்வளமுடன் பார்போற்ற வாழ்தல் அரிது
பட்டினி போக்கி வாழ்தல் அதனினும் அரிது /
முகதக நட்பு மலர்தல் அரிது
அகநக நட்பு அதனினும் அரிது /
பேரும் புகழும் பெற்றிடல் அழகு
பெரும் சேவை புரிந்திடல் அதனினும் அழகு /
தானம் தர்மம் தலைகாத்தல் அரிது
தந்தையர் முன்னோர் கருமச்செயல் அதனினும் அரிது /
நூறாண்டு வாழ்தல் அரிது
நோய்நொடியின்றி வாழ்தல் அதனினும் அரிது /
அபிராமி கவிதாசன் .
13.04.2022