வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -165. 17.03.2022

“வாழ்த்திட வந்தேன் மகனே “

என்றன் மடிதனில் மலர்ந்த மகவே
உன்றனை போற்றி வாழ்த்திடவே வந்தேன்

கட்டி என்னில் முத்தம் பதிப்பாய்
கரும்பாய்பேசி கருத்தாய் ஆழ்வாய்

சுட்டி செய்தே சுற்ற வைப்பாய்
சுகமாய் அன்பை உணர்த்திட வைந்தாய்

கண்ணை கட்டி தேட வைப்பாய்
கண்ணில் பட்டு கரும்பாய் நகைப்பாய்

தர்க்கம் செய்து தட்டணை பெறுவாய்
சொர்க்கம் சேர்வாய் சொந்தம் சேர

நட்புடன் ஆட நாட்திசை ஓடி
திட்டம் போட்டு தீர்ப்பும் தருவாய்

பாமுக குழந்தையாய் பல்கலை புரிவாய்
பூமுகம் மலர புத்துணர்வு அளிப்பாய்

வள்ளுவன் பேரினை வாகை சூட்டியே
தெள்ளு தமிழை தெவிட்டாது உரைப்பாய்

அப்பா செல்லம் அன்பில் குறும்பு
அம்மா சொல்லை ஆராதனை செய்வாய்

இல்லக் குறும்பை இனிதாய் படைத்தேன்
செல்ல மகனே செவிதனில் ஏற்பாய்

அன்புடன்
அப்பா அம்மா 🙏💖