வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்-163. 17.02.2022
“ உருமாறும் புதிய கோலங்கள்”

காலத்தின் கோலத்தில் கருமாறி
உருமாறும் புதிய கோலங்கள்
பூத்திருக்கும் பற்பல வண்ணங்களில்
படர்ந்திருக்கு பந்தலிட்டு

உள்ளங்கள் உருமாறி
உள்ளொன்றும் புறமொன்றும்
உதிர்க்கும் வாய்ச்சொல்
வடுவாகி ரணமாகி வாட்டுதிங்கே

பாதைகளும் பயணங்களும்
பணி வழித் தடங்களும்
தடம்மாறி இடம்மாறி
தடுமாறி தவிக்கிறது

உற்பத்தி நிலைமாறி
விலைவாசி படியேறி
பருவகாலம் சதியாகி
பயணிக்குதே தடுமாறி

பட்டங்களும் சட்டங்களும்
இணையவழி இடம்மாறி
வாழ்க்கையிடம் வாததர்க்கம்
சாதனைகள் வேதனையே

உயர்ந்தோர் தாழ்வதும்
தாழ்ந்தோர் உயர்வதும்
தரணியின் நியதியென்பார்
தடைக்கல்லும் படிக்கல்லாய்

கருமாறி உருமாறி
நிறம்மாறும் மனிதர்கள்
வாழ்க்கையின் நியதியா
வாழ்வைஅழிக்கும் சதியா

நன்றி வணக்கம்🙏
அதிபர்..சகோதரி கலைவாணி மோகன்
அவர்களுக்கும்…,
அனைத்து கவிகளையும் … அழகாக
தட்டிக்கொடுக்கும்
சகோதரி நகுலா அவர்களுக்கும் ..
சிவதர்சினி அவர்களுக்கும்..
என்மனமார்ந்த நன்நன்றிகள்🙏💖