சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

“மீண்டெழு”
ஆண்டவன் கட்டளைப்படி
ஆணையிட்ட நெறிமுறையின் வழிவாழ்ந்து..
மாண்டு மறைந்த மனிதநேய
மனிதரெல்லாம் மண்மீதில்
மீண்டெழுந்து மனிதத்தின்
புனிதம் காக்க வேண்டும்!

காலத்தின் கோலமும்
கயவரின் சாலமும்
ஞாலத்தின் மீதினில்
ஞானத்தை வீழ்த்திடும்
வீழ்ந்த கனமே வீறுகொண்டு
மீண்டெழுந்து மீசையை முறுக்க வேண்டும்.

போற்றுவோர் போற்றுவர்
தூற்றுவோர் தூற்றுவர்
ஏற்றத் தாழ்வைத் ஏற்றி வைத்து
போற்றிப் போற்றி தற்ப்புகழைப் பாடி
நற்பெயரைக் கெடுக்க நான்கு பேர்
சுற்றிடும் நயவஞ்சகரை வீழ்த்தி
மீண்டெழ வேண்டும்!

மண்ணுக்குள் போட்டுப் புதைத்தாலும்
மண்ணைப் பிளந்து அன்று தான்
பிறந்த குழந்தையாய் மலர்ந்து
சிரிக்கும் மழலை வித்துப் போல்
மனிதா மண்மீதினில் மீண்டெழு!!!
அபிராமி கவிதாசன்