அன்னைக்கு நிகர்ருண்டோ அவனியிலே
அ.வளின்றி அசைந்திடுமோ உயிரினிலே
அன்பிலே மூழ்க வைப்பாள்
அரவணைத்து செல்ல சீராட்டுவாள்
பத்து மாத்ம் கருவில் சுமந்தாள்
கஷ்டப்பட்டு பெற்றெடுத்தாள்
கண்விழித்து வளர்த் தெடுத்தாள்
மனிதநேயம் கற்றுத் தந்தாள்
ஒழுக்கம் சொல்லித் தந்தே
உறவிலே நனைய விட்டாள்
அன்பு பண்பு பாசம்
அத்தனையும் கொட்டி வளர்த்தாள்
இவள் தான் அன்னை எனும் தெய்வம்
அம்மா என்றால் அன்புதானே
அதற்கீடு இணை எதுவுமில்லையே
தானத்தில் சிறந்தது ரத்ததானம்
தன்ரத்தத்தையே பாலாக்கி தந்து
தானம் செய்தவள் அம்மா
தன் பசி பொறுத்து
பிள்ளையின் பசி தீர்ப்பவள் தாய்
தாயின் சுயநல மில்லா
சேவை எத்தனை பெரிய சேவை
அன்னை என்ற பொக்கிஷத்தை விட
வேறென்ன பெரிதாம் இவ்வுலகில்
சக்தியின் மறுபிறவி அம்மா
இவளுக்கு ஈடானது எதுவுமில்லை
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!