வியாழன் கவிதை

“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே “

வியாழன் கவி :
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ”

கருணை எனும்
பொருள் நிறைந்த
அட்சய பாத்திரம்
அகராதியில் எதுவும் இல்லை
அன்னைக்கு நிகர்
கருவாகி கால் பதியும் வரை
சுமை ஏற ஏற
சுகம் என்று சொல்கின்ற குரல்
அன்னைக்கு நிகர் உண்டு அதில்

ஆயிரம் தடை எதிர்
கொண்ட போதும்
அம்மாவின் கை ஒன்று போதும்
துயர் களையும் நிதம்
நம் ஆளுமைக்கு அவர்
எந்நாளும் முதல்
ஆண்டாண்டு காலங்கள்
புரண்டோடி போனாலும்
நம்மோடு நடமாடும் நகல்
அன்னைக்கு நிகர் அவனியிலே எதுவும் இல்லை

நன்றி