வியாழன் கவிதை

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

பேரின்பம் ஒன்றென்றால் பெற்றவளின் தாலாட்டே
பாரினிலே உண்டோசொல் பாசத்தின் உறவொன்று
ஈரநெஞ்சங் கொண்ட இறைவனும் அவளே
ஆரமுதே என்றேதான் அணைத்திடுவாளே
அவனியிலே நிகருண்டோ?
தன்னையும் விஞ்சியே தன்னுயிர் தந்தாளே
தன்னலம் இன்றியே தன்னை உருக்கியே
என்னாளும் சேய்களை எண்ணுவாள் பூமியிலே
கண்கண்ட தெய்வம் கருணைகாட்டும் தாயவளே
அவனியிலே நிருண்டோ?
உலகினைக் காண உடலது ஈந்தாளே
பலவகைப் பாடுகள் பட்டிடுவாள் அன்னையன்றோ
பேரன்பின் பெருவெளி பேறு பெற்றோமே
தாரக மந்திரம் தாரணியில் தாயவளே!
அவனியிலே நிகருண்டோ?

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள்!
திரு.திருமதி. நடா மோகன் அவர்கட்கு மிகுந்த நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுக் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.